செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு அரசு வந்து செய்ய வேண்டியது வருமுன் காப்பது. வருமுன் காப்பவது தான் அறிவாளிதனம். வந்தபின் தடுப்பவர் ஏமாளி. அதுபோல் வருமுன் காப்பாற்றுவோம், வருமுன் நாம் எல்லா நடவடிக்கையும் எடுப்போம். வருமுன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வந்த பின்னால் ஒன்னும் செய்ய முடியாது.
முதலமைச்சராக இருக்கின்ற திரு ஸ்டாலினுடைய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர், அவருடைய சட்டமன்ற அலுவலகமே போன மழையில் பல நாட்களாக மூழ்கிருந்தது. அப்போது தன்னுடைய தொகுதியே பராமரிக்க முடியாத, தன்னுடைய தொகுதியை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியாத, முதலமைச்சர் இந்த நாடு பெற்றிருப்பது தான் வேதனைக்குரிய ஒரு விஷயமாக நாம் பார்க்க முடியும்.
இந்த மழையிலாவது உருப்படியாக எந்த வேலையாவது செய்தால் அது நல்லது. அது செய்வார்களா ஆனால் ? நிச்சயமாக செய்ய மாட்டார்கள். வெறும் போட்டோஷூட் மட்டும் நடக்கும், விளம்பர அரசியல் மட்டும் நடக்கும். இது ரெண்டும் கண்டிப்பாக நடக்கும்.
தமிழகத்தில் கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, போதைப்பொருள் அதிகரிக்க காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியது, தன்னுடைய இயலாமையை அடுத்தவர்கள் மீது பழி சொல்கிறார்கள், அதைத்தான் மா சுப்பிரமணியம் செய்து கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.