Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பட்டியில் இருந்த ஆடுகள்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே. ஈச்சம்பாடி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த வாரம் பட்டியில் இருந்து   5 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றது. இந்நிலையில் பெருமாள் தனது ஆடுகளை மீண்டும் பட்டியில் அடைத்துள்ளார்.அதேபோல்  நேற்று முன்தினம் பட்டியில் இருந்த  ஆடுகளை  விலங்குகள் கடித்த குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 15  ஆடுகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த பெருமாள் கதறி அழுதுள்ளார். மேலும் இது குறித்து பெருமாள் கூறியதாவது. நான் 40 ஆடுகளை வளர்த்து வந்தேன். தற்போது 20 ஆடுகள் மட்டுமே உள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |