பிரபல சினிமா விமர்சகர் கௌஷிக் மாரடைப்பால் இறந்ததற்கு சினிமா பிரபலம் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல சினிமா விமர்சகரும் வி.ஜெவும் ஆகிய கௌஷிக் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். தற்போது இருக்கும் சோசியல் மீடியா உலகத்தில் சினிமா செய்திகள் உடனுக்குடன் அறிவிப்புகள் என ரசிகர்களுக்கு சினிமா சார்ந்த தகவல்களை பதிவிட்டு வருபவர் தான் கௌஷிக். இவர் சமூக வலைதளங்களில் தான் பதிவிடும் சுவாரசியமான தகவலின் மூலமாக பல ரசிகர்களை தன்னை பின்தொடர் செய்திருக்கின்றார். 35 வயதே நிரம்பிய கௌஷிக் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் காலமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது.
சினிமாவை நேசிக்கும் ஒருவர் ரசிகர்களுக்கு சினிமா தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து வந்த ஒருவர் திடீரென மறைந்த சம்பவம் சினிமா துறையை சார்ந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கௌஷிக் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் கூறியுள்ளதாவது, இதயம் நொறுங்கி விட்டது. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் சகோதரா. அதற்குள் போய்ட்டிங்களே. அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
This is heart breaking !! Rest in peace @LMKMovieManiac brother. Gone too soon. My deepest condolences to his family and friends.
— Dhanush (@dhanushkraja) August 15, 2022
மேலும் கௌசிக் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, கௌசிக் பற்றி அறிந்து அதிர்ச்சியாக இருக்கின்றது. அதற்குள் சென்று விட்டீர்களே எனக் கூறியுள்ளார்.
Shocked to hear abt @LMKMovieManiac gone too soon
Rip bro…— aishwarya rajesh (@aishu_dil) August 16, 2022
இதைத்தொடர்ந்து உங்களைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன். பிரார்த்தனை செய்கின்றேன். உங்களை மிஸ் பண்ணுவோம் கௌஷிக் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
Thinking of you and saying a prayer.
You will be missed @LMKMovieManiac.— Vijay Deverakonda (@TheDeverakonda) August 15, 2022