Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 17) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்….. இதோ முழு லிஸ்ட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம்:

கோவை கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் இடங்கள்: காமராஜா் சாலை, பாரதி நகா், சக்தி நகா், ஜோதி நகா், ராமானுஜ நகா், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூா், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகா், பாலன் நகா், சா்க்கரை செட்டியாா் நகா், என்.ஜி.ஆா்.நகா், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகா், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை.

திண்டுக்கல் மாவட்டம்:

பாளையம் துணை மின்நிலையத்தில் 17-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பாளையம் வான்ராயன்பட்டி, ஆணைப்பட்டி, கூடலூர், குஜிலியம்பாறை, வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வள்ளிப்பட்டி துணைமின்நிலையத்தில் 18-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை அம்மாபட்டி, ராமகிரி, தலிப்பட்டி, மல்லப்புரம், உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், வள்ளிப்பட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதநாயக்கனூர், இடையபட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |