நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதனால் கொரோனா பாதிப்பும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பொது இடங்களில் முகாம் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதை பயன்படுத்தி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 74 கோடி பேரில் 12 கோடி பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர்.