Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராட்சத அலையில் சிக்கிய 4 பேர்…. கரை ஒதுங்கிய 2 பேரின் உடல்…. மற்றவர்களின் நிலைமை என்ன?… சோகம்….!!!!

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர்நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கரீம் மொய்தீன். இவருடைய குடும்பத்தினர் 9 பேர் நேற்றுமுன்தினம் திருவொற்றியூர்பலகை தொட்டிக்குப்பம் அருகில் கடலில் குளித்தனர். அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி ஆட்டோ டிரைவர் கபீர் (24), சிறுமி அம்ரீன் (18), அவருடைய தம்பி ஆபான் (14), அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர். இதையடுத்து அவர்களை அருகிலிருந்த மீனவர்களும், உறவினர்களும் காப்பாற்ற முயற்சி செய்தனர். எனினும் 4 பேரும் கடலில் மூழ்கி மாயமானார்கள்.

அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் மற்றும் மெரினா நீச்சல் படை சிறப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை மாயமானவர்களில் ஒருவரான சபரியின் உடல் கரைஒதுங்கியது. அதேபோன்று திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே சிறுமி அம்ரீன் உடலும் கரை ஒதுங்கியது. அதன்பின் காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலியான சபரி பிளஸ்-1 மாணவர் ஆவார். இவர் நண்பர்கள் கடலில் குளிக்க செல்வதை அறிந்து அவர்களுடன் வந்த போது மூழ்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இறந்த 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அத்துடன் கடலில் மூழ்கி மாயமான கபீர், ஆபான் ஆகிய மற்ற 2 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இதன் காரணமாக அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவிப்பில் இருக்கின்றனர். இதனிடையில் 2-வது நாளாக அவர்கள் 2 பேரையும் தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.

Categories

Tech |