Categories
தேசிய செய்திகள்

“போஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை இங்கெல்லாம் நடத்துங்கள்”….. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 2 டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவரப்படி 64, 89, 99, 721 பேர் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அவர்களின் 8% பேர்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட பெருமளவில் மக்கள் முன்ரவரவில்லை. எனவே மக்களை ஊக்குவிக்க கூடிய வகையில் இந்தியாவில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

இந்நிலையில் மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்களை பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், புனிதப்பயண வழித்தடங்கள், மத வழிபாட்டுத்தலங்கள்  என மக்கள் கூடும் இடங்களில் நடத்துங்கள். அதன்பிறகு தகுதி வாய்ந்த மக்களில் அதிகமானோர் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளச்செய்யுங்கள். கோவேக்சின், கோவிஷீல்டு என எந்த தடுப்பூசிகளின் 2 டோஸ்களை செலுத்தி இருந்தாலும், அவர்கள் பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மேலும்  தடுப்பூசிகள் வீணாகாமல் தடுக்ககூடிய  வகையில், முதலில் சீக்கிரமாக காலாவதியாக உள்ள தடுப்பூசிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Categories

Tech |