அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஐ நீக்கிய நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஓபிஎஸ் முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
அதில் திராவிடத்தின் பெயரில் புதிய கட்சி தொடங்கலாமா, டிடிவி மற்றும் சசிகலாவுடன் இணைந்து ஈபிஎஸ்-க்கு எதிராக அரசியல் செய்யலாமா அல்லது பாஜகவில் இணையலாமா போன்றவை குறித்து ஆலோசித்து முக்கிய முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.