Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொளுந்துவிட்டு எரிந்த பேருந்து…. எப்படின்னு தெரியுமா?…. கொள்ளையர்கள் செய்த செயலால் பெரும் பரபரப்பு….!!!!

சென்னை வடபழனி பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் பேருந்துக்காக நின்றிருந்த சிவா (41) என்பவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை பறித்துவிட்டு தாம்பரம்  நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் போகும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவுவாயில் அருகில் நின்றிருந்த முகமது இப்ராகிம் (35) என்பவரிடமும் செல்போனை பறித்து விட்டு வேகமாக தப்பிச்சென்றனர். இதையடுத்து மர்ம நபர்கள் தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேகமாக சென்ற போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் நிறுத்தியிருந்த தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பேருந்து மீது பயங்கரமாக மோதிவிட்டது.

அத்துடன் மோட்டார்சைக்கிளிலுள்ள பெட்ரோல் டேங்க் மூடி கழன்று பெட்ரோல் வெளியேறியதால் மோதிய வேகத்தில் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. அதன்பின் பேருந்து மீதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே கொள்ளையர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதனை தொடர்ந்து தாம்பரம் தீயணைப்புவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து, மோட்டார்சைக்கிள் இரண்டும் முற்றிலும் எரிந்து நாசமாகியது. அதன்பின் செல்போன் பறிப்பு குறித்து வடபழனி மற்றும் விமான நிலைய காவல்துறையினரும், பேருந்து மற்றும் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்தது தொடர்பாக தாம்பரம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |