அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொதுக் குழுவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாகவும், இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. ஓபிஎஸ்ஐ ஒதுக்கிவிட்டு இபிஎஸ் -ஆல் இனி ஒன்றும் செய்ய முடியாது.இதனால் அதிமுகவின் நிலவி வந்த ஒற்றை தலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதால் மீண்டும் இருவரும் இணைந்து அதிமுகவை வழி நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்திப்பு நடக்கும் என கூறப்படுகிறது.