Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்கொணர்வு மனு தாக்கல்: வக்கீல் போல் நாடகமாடிய நபர்…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை கொளத்தூரில் வசித்து வரும் சாந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவற்றில், ரம்யா, வக்கீல் பாபு போன்றோரிடம் இருந்து தன் மகனை மீட்டுத் தரக்கோரி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சென்னை அண்ணா நகரை சேர்ந்த பாபு ஒரு போலி வக்கீல் என்பது தெரியவந்தது. அதாவது பாரதிதாசன் பல்கலையில் சட்டப்படிப்பு படித்ததாக போலியான சான்றிதழை அவர் சமர்ப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலி வக்கீல் பாபுவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் மீது வேறு ஏதாவது வழக்குகள் இருக்கிறதா..? யாராவது இவரை நம்பி ஏமாந்திருக்கிறார்களா..? யாருக்காவது அவர் ஆஜராகி இருக்கிறாரா..? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையில் தலைமறைவாக இருந்த போலி வக்கீல் பாபு தஞ்சையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பின் உதவி கமிஷனர் சச்சிதானந்தம் தலைமையிலான தனிப்படை தஞ்சை மாவட்டம் மாணாங்கோரை என்ற இடத்தில் வைத்து போலி வக்கீல் பாபுவை கைது செய்தனர்.

Categories

Tech |