ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருவதாக கூறி 25,000 மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்லை அடுத்த சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் ஆன இவருடைய செல்போனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர் முனையில் பேசிய பெண் ஒருவர் ஆன்லைனில் குறைந்த வட்டியில் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் பழனிசாமி கடன் வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை புகைப்படம் எடுத்து அந்தப் பெண் கூறிய மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
அதன்பின் அந்தப் பெண் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்க வேண்டும் என்றால் வங்கி கணக்கில் 25,000 இருப்பு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் பழனிசாமி தனது வங்கி கணக்கில் 25,000 செலுத்திவிட்டு அந்த பெண்ணிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த பெண் ஏடிஎம் கார்டில் இரு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கூறியுள்ளார். அதன்படி ஏடிஎம் கார்டின் புகைப்படத்தை அனுப்பியவுடன் பழனிச்சாமியின் செல்போனுக்கு வந்த கடவுச்சொல்லை கூறும்படி பெண் கேட்டுள்ளார். அதையும் பழனிசாமி கூறி விட ஒரு சில நொடிகளில் அவருடைய வங்கி கணக்கில் இருந்த 25,000 ரூபாய் காணாமல் போனது.
ஏடிஎம் கார்டில் இருந்த ரகசிய என்னை பயன்படுத்தி அந்த பெண் பணத்தை திருடி இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேனுகாதேவி, சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் போன்ற வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்தப் பெண் வட மாநிலத்திலிருந்து பேசியது தெரியவந்துள்ளது. எனினும் பழனிசாமியின் பணத்தை சைபர் கிராம் போலீசார் மீட்டு கொடுத்துள்ளனர்.