Categories
சினிமா

சாதாரண புடவை கட்டினாலும் அப்படிதான் சொல்றாங்க?… வாணி போஜன் ஆதங்கம்….!!!!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணிபோஜன் “ஓ மை கடவுளே” திரைப்படம் வாயிலாக சினிமாவிற்கு வந்தார். இந்த படத்தில் வாணிபோஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. எனினும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. இதனையடுத்து தேவைப்படும் சமயத்தில் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என வாணிபோஜன் முடிவு எடுத்தார். அதன்பின் தன் கவர்ச்சியான படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் வாணிபோஜன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கவர்ச்சியாக நடிக்க முடிவெடுத்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் “கவர்ச்சியாக நடிப்பதில் தவறு கிடையாது. ஆனால் அது எல்லை மீறக் கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்று கூறுகிறார்கள். காலத்திற்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாறவேண்டும்” என்று அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

Categories

Tech |