Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி மாறாது… ! இனி ஸ்டாலின் தான் C.M… மெர்சலாகிய சுப வீ …!!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன்,  தமிழ்நாட்டில் இனி ஆட்சி மாறாது, தளபதி தான் என்றென்றும் முதலமைச்சர், திமுக கழகத்தின் ஆட்சிதான் நடக்கும். நாம் தான் ஆளுங்கட்சி, அவர்கள் எதிர்க்கட்சி.

எப்போதும் நாம் அல்லது அவர்கள் என்பது அல்ல, நாம் தான் ஆளுங்கட்சி ஆக இருக்க வேண்டும். ஆனால் இரண்டு கட்சிகளையும் அழித்துவிட்டு திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்திவிட்டு உள்ளே வர நினைக்கிறவர்கள் எத்தனை வன்முறைகளை கையில் எடுத்து இருக்கிறார்கள். கொஞ்சவும் கூச்சம்,  இல்லாமல் எத்தனை செயல்களை செய்து இருக்கிறார்கள் என்பதை இந்த கூட்டத்தில் நான் கலைஞருடைய நினைவு போற்றுகின்ற கூட்டத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனென்றால் இன்றைக்கு வந்திருக்கின்ற புதிய எதிரிகள் அல்லது வர முயற்சிக்கின்ற புதிய எதிரிகள், இதுவரையில் நாம் பார்த்த எதிரிகள் இல்லை. இதுவரையில் திமுகவிற்கும் – அதிமுகவிற்கும் சண்டை என்றால் அது வெறும் பங்காளி சண்டை.  இப்போது நடக்கப்போவது பரம்பரை சண்டை. காலம் காலமாக நமக்கும் அவர்களுக்குமான சண்டை மறுபடியும் தமிழ் நாட்டின் தெருக்கடிகளில் அரங்கேற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் பொய்யாக இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |