Categories
சினிமா

ரஜினியின் திரைப்பயணம் தொடங்கி இவ்வளவு வருஷம் ஆயிட்டு?… மகள் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு….!!!!

கடந்த 1975ம் வருடம் இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வராகங்கள் படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். இதையடுத்து இவருடைய நடிப்பின் வாயிலாக கதாநாயகனாக பல்வேறு படங்களில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியாகிய பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் ஆகிய பல்வேறு படங்களின் வாயிலாக ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணிநடிகராக மாறினார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகுக்கு முன்னணி கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் ரஜினி திரையுலகிற்கு வந்து 47 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூகவலைத்தளத்தின் வாயிலாக கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார். இந்த வருடம் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் அதே சமயத்தில் அவருடைய தந்தையின் திரை வாழ்க்கையை குறிக்கும் விதமாக ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில், சுதந்திரத்தின் தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம். பெருமை மிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு அர்ப்பணிப்பு! அவருக்கு பிறந்ததில் பெருமை என்று குறிப்பிட்டு, ரஜினிக்கு தேசியக் கொடியை குத்திவிடும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இவரின் இப்பதிவு அனைவரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

 

Categories

Tech |