Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் பொதுச்செயலாளரக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.‌ இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டம் செல்லாது எனவும், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பளித்தார். அதன் பிறகு அதிமுகவில் முன்பு இருந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவியே தொடர வேண்டும்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் பொதுக்குழு கூட்டம் மட்டுமே செல்லுபடி ஆகும். பொதுக்குழு கூட்டங்களை கூட்டுவதற்கு ஒரு ஆணையாளரின் நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். இந்த தீர்ப்பினால் எடப்பாடி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர். மேலும் எடப்பாடி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்களுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |