Categories
அரசியல்

“கபட நாடகத்தால் எங்களை வியக்க வைக்க முடியாது” திமுகவை கிண்டல் செய்த அண்ணாமலை…. கடுப்பில் நிர்வாகிகள்….!!!!

அண்ணாமலையின் டுவிட்டர் பதிவால் திமுக நிர்வாகிகள் கடுப்பில் இருக்கின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருள் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படும் என்று கூறிவிட்டு, தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்தார். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் போதை பொருளை ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழக மக்கள் யாரும் போதை பொருளை பயன்படுத்த வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதால் நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையால் கிடைத்த வருமானம் குறித்த தகவலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ. 273.93 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது‌. இதில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் ரூ. 52.29 கோடிக்கும், திருச்சியில் ரூ. 53.48 கோடிக்கும், சேலத்தில் ரூ. 52.12 கோடிக்கும், சென்னையில் ரூ. 55.77 கோடிக்கும், மதுரையில் ரூ. 58.76 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஆகஸ்ட் 11-ஆம் தேதி மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்து விட்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி அரசு மதுபான கடைகளின் மூலமாக கிடைத்த வருமானம் குறித்த தெரிவித்த தகவலை வெளியிட்டுள்ளனர். இது போன்ற கபட நாடகத்தால் எங்களை எங்களை வியக்க வைக்க முடியாது என்று கேலியாக பதிவு செய்துள்ளார். இதனால் திமுக நிர்வாகிகள் செம கடுப்பில் இருக்கின்றனர். மேலும் கடந்த வாரம் அரசு மதுபான கடைகளுக்கு பதிலாக கள்ளு கடைகளை கொண்டு வர வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |