நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அளித்த பேட்டியில், இதய தெய்வம் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது அவரை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றிய பொழுது பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் உடைய ஆதரவை வைத்து அவரை நீக்கினார்கள்.
அதை மனதில் வைத்து இந்த இயக்கத்திற்கு தொண்டர்களால் கழக உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதாவது அந்த சட்ட விதியை வகுத்தார். அவர் வகுத்த விதி இன்றைக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.