Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டை பையில் இருந்த கடிதம்…. தூக்கில் தொங்கிய போலீஸ்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர்    கிராமத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல்துறையில்  போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் பணி இடை  நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து மகேஸ்வரன் நேற்று சவுளூர் தேசிய நெடுஞ்சாலையில்   அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மகேஸ்வரனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரனின் சட்டை பையில் இருந்த கடிதத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |