மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரியும் லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் 1 மாத விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அரணி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்திடுமாறி இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தவர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அங்கு அழிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.