அக்காவை காதலித்த காரணத்தால் உறவினர் என்றும் பாராமல் கொலை செய்த தம்பி.
கோயம்புத்தூர் மாவட்டம் தாமரைக் குளம் சேர்ந்தவர் தினேஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் மணிகண்டன். தினேஷ்குமார் மணிகண்டனுக்கு அண்ணன் முறையில் வரும் வகையில் மணிகண்டனின் அக்காவும் தினேஷ்குமாரும் இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மணிகண்டன் தினேஷ்குமார் இடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இருந்தும் தினேஷ்குமார் காதல் தொடர்ந்து உள்ளது இதனால் பலமுறை மணிகண்டன் எச்சரித்துள்ளான்.
பின்னரும் தொடர்ந்த காதலினால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேற்று தினேஷ்குமார் இல்லத்திற்கு சென்று அங்கே இருந்த தினேஷ்குமாரை உன்னிடம் பேசவேண்டும் என அழைத்துச்சென்று காதலை கைவிட்டு விடும்படி கூறியுள்ளார். இதனால் மணிகண்டன் மற்றும் தினேஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் கொண்டு வந்திருந்த கத்தியினால் தினேஷ்குமாரை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்திக்குத்து பட்டு உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தினேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.