விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்குறும்பை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது சொந்த வேலை காரணமாக தட்டாங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அண்ணாமலையின் மோட்டார் சைக்கிள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அண்ணாமலை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலையின் மனைவி அலமேலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.