Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கழிவறையை சுத்தப்படுத்திய மாணவர்கள்…வற்புறுத்தியதாக தலைமை ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை..!!

பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் வற்புறுத்தியுள்ளதாக நடவடிக்கை..

கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே இருக்கும்  புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் சுமார்  70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் அருந்ததி காலனி சேர்ந்த மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர்.

இந்த பள்ளியில் குமரேஸ்வரி தலைமை ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.  இவர் 5-ம் வகுப்பு படிக்கும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவர்களை அடிக்கடி கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்துவதாகவும், சிலநேரம் மாணவர்களை இழிவாகவும் பேசி உள்ளார், அடிக்கவும் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மாணவர்கள் அதிகளவில் பாதிக்க பட்டுள்ளனர். அவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியை குமரேஷ்வரி மாணவர்களை நேற்றைய முன்தினம் தொடர்ந்து சில மாணவர்களை தரக்குறைவாக பேசியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பெற்றோர்-ஆசிரியர் கழக முன்னாள் நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர் சங்க முன்னாள் நிர்வாகிகள் கூட்டம் ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெற்றது.

கல்வி அலுவலர் க்ரிஷணகுமார் தலைமை ஆசிரியை மற்றோரு பள்ளிக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார். அதற்கான உத்தரவு இன்று வெளியாக கூடும்.  முன்னாள் கவுன்சிலர்கள் ராமசாமி, அய்யாசாமி, மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்து பெரிய நாயக்கன் பாளையம் வட்டார கல்வி அலுவலர்ஜெ.பி. கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை குமரேஷ்வரியிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் பொதுமக்கள் தலைமை ஆசிரியையை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். இல்லை என்றால் நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

வட்டார அலுவலர் அவர்களை சமாதானப்படுத்திய வட்டார கல்வி அலுவலர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, தலைமை ஆசிரியை குமரேஷ்வரி இதற்கு முன்பு பணியாற்றிய பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளார்.

Categories

Tech |