வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கின்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகின்றார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் வாரிசு படத்தின் அப்டேட்டுகளை தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு நடுவே நடிகர் விஜய் ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவிற்கு சொந்தமான திரையரங்கில் தெலுங்கு படத்தை பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது. இது பற்றி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த படம் 2023 ஆம் வருடம் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.