Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படி தான் கால்நடைகளை பராமரிக்க வேண்டும்…. 7 நாட்கள் நடைபெறும் முகாம்…. அறிக்கை வெளியிட்ட கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர்….!!!!

கால்நடை மருத்துவ கல்லூரி  முதல்வர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் நர்மதா அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கால்நடை மருத்துவக் கல்லூரியில் வருகின்ற 23- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 7  நாட்களுக்கு கிராமப்புற இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்நடைகளை தேர்வு செய்வது எப்படி?, தீவன மேலாண்மை, கொட்டகை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தடுப்பூசி மேலாண்மை, வங்கிகள் கடன் பெறும் வழிமுறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், கால்நடைகளுக்கான காப்பீடு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் போன்றவை குறித்து செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதில் சேர்வதற்கு   40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே சேர விரும்புபவர்கள் ஆதார் எண்ணுடன் தனது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் கால்நடை மருத்துவக் கல்லூரி முகவரிக்கு அல்லது 04372-234014, 94439 67560, 94436 88842, 99528 45780 ஆகிய தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அவர் அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

Categories

Tech |