Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா…. கோவையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்…!!!!!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது  இந்த வருடம் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் விநாயகர் சிலைகளை வீடு மற்றும் பொது இடங்களில் வைத்து பூஜை செய்வது வழக்கம். அதன் பின்  அந்த சிலைகளை 3 முதல் 5 தினங்களில் உருவமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்து விடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின்  காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் நடைபெறாமல்   இருந்தது.

ஆனால் தற்போது  கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால்  பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் தெலுங்கு பாளையத்தில் பல வடிவங்களில் விநாயகர் சிலை தயார் செய்யும் பணி தீவிரமாக  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது பற்றி கோவை மாவட்ட சிலை தயாரிப்பாளர்கள் பேசும்போது, விநாயகர் சிலை 5 அடி  முதல் 12 அடிவரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வழியில் ரசாயனம் பயன்படுத்தாமல் மரவள்ளி கிழங்கு, காகித கூல் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றது. மேலும் நந்தி விநாயகர் ராஜகணபதி, வீரசிவாஜி புல்லட் ஒட்டும் கணபதி உட்பட பல வடிவங்களில் விநாயகர் சிலை வடிவமைக்கப்படுகின்றது. ரிஷப வாகனம், சர்ப்பம், மயில், அன்னம் போன்ற வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலை தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

Categories

Tech |