Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர தின அமுத பெருவிழா”… 6 கண்டங்களில் இந்திய கடற்படை மூவர்ணக் கொடி….!!!!

இந்தியா தன் 76வது சுதந்திரதினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் 6 கண்டங்கள், 3 பெருங்கடல்கள் மற்றும் 6 வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளது. இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் ஆகஸ்ட் 15 அன்று பல துறைமுகங்களை அடைந்து இந்திய புலம்பெயர்ந்தோர், பிற உயர்மட்ட தலைமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றியது. இதுகுறித்து வீடியோ ஒன்றை டுவிட் செய்த இந்தியகடற்படை “75 வருட சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் 6 கண்டங்கள், 3 பெருங்கடல்கள் மற்றும் 6 வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ணக்கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தியது” என பதிவிட்டு அதன் கணகவர் வீடியோவையும் பகிர்ந்து கொண்டுள்ளது.

சுதந்திரதின அமுத பெரு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கென்யாவின் மொம்பாசா துறைமுகத்துக்கு INS தபார் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின்போது ​​கப்பல் மற்றும் பணியாளர்கள் மொம்பாசா நகரில் பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டது. அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு போர்க் கப்பலான ஐஎன்எஸ் சத்புரா தன் தள துறைமுகத்திலிருந்து வட அமெரிக்க கண்டத்தை நோக்கி சுமார் 10,000 கடல் மைல் தொலைவில் பயணித்தது.

இது தவிர்த்து சான் டியாகோ அமெரிக்க கடற்படை தளத்தில் போர்க் கப்பல் 75 சுற்றுகள் கொண்ட “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் ரன்” நடத்தும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக தியாகம் செய்த அந்த 75 மாவீரர்களுக்கு இந்நிகழ்ச்சி அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்பது 75 வருடகால சுதந்திர வரலாறு, இந்தியாவின் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுகூருவதற்கும் இந்திய அரசாங்கத்தின் முன் முயற்சியாகும். மக்களின் இதயங்களில் தேச பக்தியின் உணர்வைத் தூண்டி, மூவர்ணக் கொடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள யோசனை ஆகும்.

Categories

Tech |