Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்…. ராணுவ தளத்தின் மீது பயங்கர தாக்குதல்…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!!!

ரஷ்ய படையினரின் ராணுவ தளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது போரை தொடங்கிய நிலையில், 6 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், மெரிடோபோல் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை ரஷ்ய படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கு ராணுவ தளங்களை அமைத்து முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது கிழக்கு உக்கிரைனை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து மெலிடோபோல் நகரில் உள்ள ரஷ்யா ராணுவ தளத்தின் மீது உக்ரைன் பயங்கரமான குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்ய இராணுவ தளம் முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் லுகான்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர் செர்ஜி கெய்டே கூறியுள்ளார். மேலும் தாக்குதல் தொடர்பான வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |