Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊர்ந்து சென்ற மூன்று பாம்புகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரூபநாராயணநல்லூர் கிராமத்தில் முருகேசன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பு இருக்கும் தோட்டத்தில் 3 சாரை பாம்புகள் ஊர்ந்து சென்றுள்ளது. இந்த பாம்புகள் அடிக்கடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் முருகேசன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மூன்று பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பிடிபட்ட பாம்புகள் காப்பு காட்டில் விடப்பட்டது.

Categories

Tech |