பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..
அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி ரவியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக என் சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.