கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் காவேரி கரையோரங்களில் சில தினங்களுக்கு முன்பு கன மழை பெய்து வந்தது. இதனால் கர்நாடகா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது . இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,30,000 கன அடி வரை அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாக தடை விதித்தது. அதனை தொடர்ந்து காவேரி நீர் படிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் காவேரி அஜ்மீர் வந்து படிப்படியாக சரியத் தொடங்கி தமிழக எல்லை பில்லி குண்டு விற்கு நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை 20,000 கன அடியாகவும் இன்று காலை 16,000 கன அடியாகவும் படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு ஒகேனக்கல் சின்னாற்றில் இருந்து கோத்தி கல்பாறை, மணல் திட்டு பகுதியில் பரிசல் இயக்கம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் மெயின் அருவியில் சேதம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதனைத்தொடர்ந்து இன்று சின்னாறு பரிசல் துறையில் கங்கா பூஜை செய்த பிறகு பரிசல் சவாரி தொடங்கப்பட்டது. மேலும் 38 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.