Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவி நினைவு நாளில்…. கணவர் செய்த செயல்… நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகில் உள்ள வாடமங்கலம் பகுதியில் மகேஸ்வரன் என்பவர்(55) வசித்து வருகிறார். இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவி முன்னியம்மாளுக்கு விஜய் என்ற மகனும், இரண்டாவது மனைவி இந்திரா காந்திக்கு சுந்தரேசன் என்ற மகனும் இனிதா என்றும் மகளும் உள்ளனர். இதில் முதல் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உள்ளார். இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடமங்கலத்தில் இருந்து கொண்டு காவலர் பணிக்கு செல்லாமல் தேங்காய் வியாபாரம் செய்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடம் முன் கணவன் மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரன் தன் மனைவியை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஜாமினில் வெளிவந்துள்ளார். முதல் மனைவியின் மகன் விஜய் மற்றும் தன்னுடைய உறவினர்கள் இருக்கும் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகில் உள்ள சவுளூர் உறவினர் வீட்டில் இரண்டு மாதங்களாக தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் முதல் மனைவி நினைவு நாளான கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று காலை முதல் மணமடைந்த நிலையில் மனைவி நினைவாக அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று இரவு நல்லம்பள்ளி அருகில் உள்ள சவூளுர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்தார் அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் காவல்துறையின் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து இவர் தூக்க மாட்டிக்கொண்ட மரத்தின் அருகிலே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், என் மனைவியின் உயிர் பிரிந்ததற்கு நான் தான் காரணம். எனவே எனக்கு வாழ பிடிக்கவில்லை. மேலும் என்னுடைய மகன் விஜய், நீ என்னை மன்னித்துவிடு உனக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்து விட்டேன். இனி நீ இங்கு இருக்க வேண்டாம் நீ உன் தாத்தா பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று விடும். உன் மாமாவிட பணம் கொடுத்து உள்ளேன் அதை வாங்கி என் இறுதி சடங்கை முடித்து விடவும் என்று தன் மகனுக்கு இறுக்கமாக கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் இது நானாக எடுத்துக் கொண்ட முடிவு என் மரணத்திற்கு மற்ற யாருக்கும் எந்த தொடர்பு இல்லை என்று எழுதி வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தோப்பூர் காவல் ஆய்வாளர் யமுனாதேவி, எஸ். பிரபாகரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரன் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர் எழுதிய கடிதங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |