Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு விரைவில் திருமணமா….? நடிகர் எஸ்.ஜே சூர்யா வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!

திருமணம் தொடர்பாக பரவிய வதந்திகளுக்கு பிரபல நடிகர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் எஸ்.ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கினார். இந்த 2 படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் எஸ்.ஜே சூர்யாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. இவர் தற்போது படங்களில் வில்லன் மற்றும் கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் வில்லனாக நடித்த மெர்சல், மாநாடு, ஸ்பைடர் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எஸ்.ஜே சூர்யாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இந்நிலையில் 54 வயதாகும் எஸ்.ஜே சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் தீயாக பரவியது.

இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எஸ்.ஜே சூர்யா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது எனக்கு திருமணம் பற்றி யோசிக்க நேரம் இல்லை எனவும், சினிமாவில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்துவதால் திருமணம் என்ற பேச்சுக்கே தற்போது இடம் கிடையாது எனவும் கூறியுள்ளார். மேலும் இதுமாதிரியான பொய்யான தகவல்கள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |