செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, இந்தியாவினுடைய 75 ஆவது சுதந்திர தின விழாவை தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்று சொன்னால், இந்த சுதந்திரத்தை பெற்று தந்தவர்களில் முதன்மையானவர்கள் நாங்கள், முக்கியமானவர்கள் நாங்கள், அந்த பெருமை எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் யாரிடமும் தயவு செய்து வாங்கவில்லை, போராடி இரத்தம் சிந்தி, உயிர் நீத்த வாங்கி தந்திருக்கிறோம்.
எனவே அந்த வகையில் இந்திய தேசத்தின் உடைய 75வது சுதந்திர தினத்தை நாங்கள் பெருமையாக கொண்டாடுகிறோம். இந்த சுதந்திர தின விழாவில் தமிழகத்தினுடைய சூளுரை என்னவென்று சொன்னால், 75 ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளையனே வெளியேறு என்று சொல்லி அந்த சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்தோம், இன்றைக்கு ஆர் எஸ் எஸ் வெளியேறு என்பதுதான் தமிழகத்தில் காங்கிரசின் உடைய பிரகடனம்.
ஏன் ஆர் எஸ் எஸ்-ஐ வெள்ளையனுக்கு இணையாக சொல்லி வெளியேற்றுகிறோம் என்று சொன்னால், இன்றைக்கு இவர்கள் இந்தியாவினுடைய பன்முகத்தன்மையை மறுக்கிறார்கள், எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதி சொன்னது போல எங்கள் வீட்டில் பல நிறங்களில் பூனை குட்டி இருக்கிறது, எல்லா நிறங்களையும் நாங்கள் நேசிக்கிறோம்.
ஆனால் சிகப்பு நிறத்தை தவிர, மற்ற நிறங்கள் எல்லாம் தூக்கி எறியப்பட வேண்டும், இந்தியாவிற்கு வெளியே அனுப்பப்பட வேண்டும் என்று சொல்லுகின்ற ஆர்எஸ்எஸ் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஆர் எஸ் எஸ் வெளியேறு என்பதுதான் இந்த சுதந்திர தினத்தின் உடைய தமிழக காங்கிரசினுடைய பிரகடனம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டில் பல பகுதிகளில் தேசியக்கொடி அவமானப்படுத்தப்பட்டதற்கு, சம்மதம் இல்லாத பொருள் அவர்கள் கையில் இருக்கிறது. அந்த கொடியினுடைய மதிப்பு , மரியாதை, தியாகம் அவர்களுக்கு தெரியாது. இல்லையென்று சொன்னால் ஒரு அமைச்சர்கள் உடைய காரின் மீது இருக்கின்ற தேசிய கொடியை அவர்கள் செருப்பை தூக்கி வீசுவார்களா?தொலைக்காட்சியில் வந்தது. அந்த செருப்பு தேசிய கொடிக்கு பக்கத்தில் இருக்கிறது, அவர்களுடைய மன உணர்வு என்ன ? அதன் நியாயப்படுத்தினார் நண்பர் அண்ணாமலை. ஆனால் மக்களிடையே எதிர்ப்பு வந்ததினால் இன்றைக்கு மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார் அவர்களுக்கு அதனுடைய அருமை தெரியாது என தெரிவித்தார்.