Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வருமான வரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்.. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் விசாரணை..!!

வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ஆஜரானார். இவர் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தயாரித்தவர் ஆவார்.

பிகில் படம் ரூ. 300 கோடி வருமானம் ஈட்டியது என செய்திகள் பரவி உள்ளது.இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வசூல் படைத்தது.

ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் வீடுகள் மற்றும் சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியனின் வீடுகள் மற்றும் அலுவலகல் ஆகியவற்றில் வருமான வரித்துறை தீவிர சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை விஜய் மற்றும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளது என்ற அடிப்படையிலும்.

இதனை தொடர்ந்து நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜயின்  ஆடிட்டர் வ ஆஜராகி விளக்கமளித்து உள்ளார். இதை தொடர்ந்து இன்று வருமான வரித்துறையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தி, ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தியிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |