மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அப்பிபாளையம் பகுதியில் பேருந்து ஓட்டுனரான கார்த்திக்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆண்டாள் கோவில் சாலையில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் டிராக்டர் ஓட்டுநர் ராமநாதன்(42) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.