பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். மாலை புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் பாரம்பரிய 9 தானிய வகைகளை நினைவுப் பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் தானியங்கள் என்ற பெயரில் மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்காரி, சீரக சம்பா, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட 9 வகையான தானியங்களை நினைவு பரிசாக அளித்தார்.