செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கலைஞர் அவர்களுக்கு பில்டிங் கட்டுகின்றேன், பில்டிங் கட்டுகிறேன் என்று நம்முடைய முதலமைச்சரையே உட்கார வைத்து அவர் மீது பில்டிங் கட்டி விடுவார்கள் என்று தெரிகிறது. கலைஞர் அவர்களுக்கு பேனா சிலையை கட்டுகின்றேன் என்று சொல்கிறார்கள், அந்த பேனா சிலைக்குள்ள எத்தனை அமைச்சர்களை உட்கார வச்சி கட்ட போறாங்கன்னு தான் தெரியல.
கலைஞர் அவர்களுக்கு கட்டக்கூடிய பேனா சிலைக்கு கீழே யார் இருக்கானு பாக்க ரொம்ப ஆச்சரியமா காத்துகிட்டு இருக்கேன் ? அதாவது ஒழுங்கா கட்டுவீங்களா ? இல்ல அங்கயும் நாலு பேர வச்சு மேல கட்டுவீங்களா. பெரியார் அவர்களைப் பொறுத்தவரை என்னை தனியாக கேட்டீர்கள் என்றால்…. கடவுள் மறுப்பு, சில ஜாதிகளை வைத்து திட்டி தான் நான் பேச வேண்டும்.
அதுக்கு எனக்கு உடன்பாடு கிடையாது. சமூக சீர்திருத்தவாதியாக நிறைய இடத்துல பண்ணி இருக்காங்க, நிறைய விஷயங்கள் செய்திருக்காங்க. பெரியார் அளவுக்கு தமிழ்நாட்டில் நிறைய பேர் பண்ணி இருக்காங்க. ஆனா அவங்களுடைய பெயர் எங்கயுமே இல்லையே. பெரியார் அவர்கள் சமூகத்திற்காக நிறைய விஷயம் செஞ்சிருக்காங்க. அதை நான் இல்லை என்று மறுக்கவில்லை.
பெரியார் அவர்களை தாக்கி பேச வேண்டும் என்கின்ற நோக்கம் பாரதிய ஜனதா கட்சி கிடையாது. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது யாரை முன் கொண்டு வருவோமோ, கொண்டு வரத்தான் போகின்றோம். பெரியார் அவர்களுடைய சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களால் எங்கேயும் எதுவும் நடக்காது. ஏன்னா அது அவரை பின்பற்றவர்கள் தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்காங்க. முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதற்காக ஒரு மனிதனை காயப்படுத்தி, ஒரு மனிதனை கொச்சைப்படுத்தி, இருக்கணும்னு பாரதி ஜனதா கட்சியை எப்போதுமே சொல்லாது என தெரிவித்தார்.