செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கிட்டத்தட்ட 20 ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று காலையில தேசியக்கொடியை ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 22 ஊராட்சிகளுக்கு இருக்கக்கூடிய பட்டியலிடத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அமர்வதற்கு இருக்கை மறுக்கப்பட்டு இருக்கிறது.
42 ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவர்களுடைய பெயர் பலகையை வைப்பதற்கு அந்த ஊராட்சியில் அனுமதி கிடையாது. ஐந்து முறை ஆட்சியில் இருந்தும், 70 ஆண்டு காலம் ஒரு கட்சி நடத்தி, 24 மாவட்டத்தில் 386 ஊராட்சிகளுக்கு இந்த நிலைமை என்றால்… இன்னைக்கு நாம சுதந்திர தினத்திற்கு எஸ்பி சொன்ன மாதிரி… ஸ்ட்ரைக்கிங் போர்ட்ஸ் போட்டு, 100 போலீஸ்காரர்களை அங்கு நிற்க வைத்து கொடியேற்ற வைத்துவிடலாம்.
அது முக்கியம் கிடையாது. இந்த எண்ணமே ஏன் வருகிறது ? தீண்டாமை சுவரே ஏன் வருகிறது ? இதற்கான முயற்சியை முதலமைச்சர் எடுக்க வேண்டும். கேலோ இந்தியா திட்டத்தில் குஜராத் மாநிலத்தில் விளையாட்டு மைதானம் கட்ட வேண்டும் என்று ப்ரோபோசல் வைக்கிறார்கள். தமிழக அரசு நீச்சல் குளம் கட்ட வேண்டும் என்று ப்ரொபஷனல் கொடுக்குது.
தமிழ்நாடு நம்முடைய மாநிலம் எனக்கு நீச்சல் குளம் கட்டுவதற்கு பணம் கொடு என்று கேட்கும் போது, குஜராத் மாநிலம் எனக்கு ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் கட்டுவதற்கு பணம் கொடு என்று கேட்டிருக்காங்க. பக்கத்து மாநிலங்கள் போட்டி போட்டு நிதியை வாங்கும்போது, தமிழ்நாடு அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாமா என்று மைண்ட் செட்டில் இருந்தார்கள் என்றால் ? எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும் என தெரிவித்தார்.