மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று வெளியூரிலிருந்து நல்ல சுபசெய்திகள் வந்து சேரும்.
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று மனவலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதேபோல் சமையல் செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இன்று எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக தான் ஈடுபட வேண்டியிருக்கும். தீ, ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். அதுமட்டும் இல்லாமல் விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போதும் ரொம்ப கவனமாக இருங்கள்.
இன்று துணிச்சலுடன் சில காரியங்களையும் எதிர்கொள்வீர்கள். கூடுமானவரை சில முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் முழுமையாக வணங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய காரியங்களில் உள்ள அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.