இன்றைக்கு வந்திருக்கின்ற புதிய எதிரிகள் அல்லது வர முயற்சிக்கின்ற புதிய எதிரிகள், இதுவரையில் நாம் பார்த்த எதிரிகள் இல்லை. இதுவரையில் திமுகவிற்கும் – அதிமுகவிற்கும் சண்டை என்றால் அது வெறும் பங்காளி சண்டை. இப்போது நடக்கப்போவது பரம்பரை சண்டை. காலம் காலமாக நமக்கும் அவர்களுக்குமான சண்டை மறுபடியும் தமிழ் நாட்டின் தெருக்கடிகளில் அரங்கேற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் பொய்யாக இருக்கிறது .
கோவையில் இரவு ஒன்றரை மணிக்கு நம்முடைய தலைவர் தளபதி அவர்களின் சுவரொட்டிகளை கிழித்திருக்கிறார்கள். நடப்பது நம்முடைய ஆட்சி. ஆனால் இரவு ஒன்றரை மணிக்கு அத்தனை பெரிய வன்முறையிலே அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். நான் இந்த மேடையிலே பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சொல்கின்றேன். காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததா என்ற கவலை நமக்கு வருகின்றது.
எப்படி நம்முடைய தளபதியுடைய சுவரொட்டிகளை அவர்கள் கிழித்தெரியலாம். அதற்கு எப்படி அங்கே பார்வையாளர்களாக காவல்துறை இருக்கலாம் ? என்பது தலைமை வரைக்கும் போய் சேர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வன்முறை கும்பல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலை என்கின்ற மனிதர் பேசுவதெல்லாம் பொய்யாக இருக்கிறது, சின்ன சின்ன செய்தியில் இருந்து பெரிய செய்தி வரைக்கும் அத்தனையும் பொய்யாக இருக்கிறது என விமர்சித்தார்.