செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வகுப்புவாரி முதன்மைதுவம் என்பது, இட ஒதுக்கீடு என்பது எந்த சாதி ? அதாவது குடிகளின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் இவற்றின் வாய்ப்பு மறைக்கப்பட்டதோ, அதே குடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒன்றுதான் இட ஒதுக்கீடு. சமூக நீதி என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோமே ஒழிய எது உண்மையான சமூக நீதி ?
சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதி வழங்குவது தான் சரியான சமூக நீதியாக இருக்கும். அதை பேசிக்கொண்டே எதற்கு குடிவாரி கணக்கெடுப்புவதற்கு இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள் ? சமூக நீதி பேசிய இந்த மாநிலத்தில் இதுவரை எடுக்கவில்லை.இதில் சமூக நீதியே பேசாத பீகாரில் இப்போ எடுக்கிறார்கள். முதல்வர் நிதிஷ்குமார் குடிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறார். அப்போ சமூக நீதி பேசுகின்ற நீங்கள் ஏன் எடுக்க தயங்குறீர்கள் ? ஒரு அடிப்படை கோட்பாடுதான்…
ஒரு குடும்ப அட்டை வைத்திருக்கிறேன் நானும் என் மனைவியும் தான். ஒரு அட்டைக்கு 10 கிலோ அரிசி இரண்டு பேருக்கு…பக்கத்தில் இன்னொரு குடும்பத்தில் 10 பேர் இருக்கிறார்கள். ஒரு குடும்ப அட்டை இருக்கிறது. அந்த குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி தான். இது நியாயமான பகிர்வா ? என்பதுதான் நாம் எழுப்புகின்ற கேள்வி. நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம். நீங்கள் 50 பேருக்கான உணவை அனுப்புகிறீர்கள், நாங்கள் 50 பேர் இருக்கிறோம். நீங்கள் ஐந்து பேருக்கான உணவை அனுப்புகிறீர்கள். இது சமமான பங்கிடா ? அதுதான் நம் இருக்கின்ற கேள்வி. அதை தான் மக்கள் மன்றத்தில் நாம் அரசுக்கு எழுப்புகின்ற கேள்வி என தெரிவித்தார்.