Categories
அரசியல் மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்டில் ஊழல் ? குடும்ப விளம்பரம் நடந்துச்சு… ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி தமிழகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்களா? ஒண்ணுமில்லையே. சும்மா என்ன பண்ணாங்க ?  அவங்க பேமிலி உட்கார்ந்து பார்க்கறதுக்கும்,  அவர் வந்து கோட் சூட்டில் வருவதற்கும், அதே போல முதல் நாள் வேட்டியில் வந்ததற்கும்,  ஒரு போட்டோ சூட் நடத்தி ஒரு பெரிய அளவுக்கு பிரமாண்டமா,  நேரு ஸ்டேடியத்துல பல கோடி ரூபாய் செலவு செய்து ஒரு விளம்பரப்படுத்துகின்ற விஷயமாதான்..

அவங்க குடும்பத்தையும்,  அவரையும் விளம்பரப்படுத்துகின்ற விஷயமாக தான் பார்த்தார்களே ஒழிய அதனால ஒரு தாக்கம் தமிழகத்திற்கு வந்ததா ? கிடையாது. ஊழல் கூட இருக்கலாம், கமிஷன் கூட இருக்கலாம், கலெக்சன் கூட இருக்கலாம்,  கரப்ஷன் கூட இருக்கலாம். அவங்க அப்பாவுக்கு நினைவு சின்னம் வைக்கிறேன்னு சொல்லி, கடலுக்குள்ள வைக்கிறதுக்கு 80 கோடி செலவு பண்றாங்க.

அதே மாதிரி செஸ் போட்டிக்கு வர்ற மாதிரி ஒரு பெரிய அளவுக்கு  பெரிய ஆடிட்டோரியம் 100 கோடியில் கட்டியிருந்தா நல்லா இருந்திருக்குமே, அதே போல பெரிய நிச்சல் குளம் கட்டி இருந்தால் நல்லா இருக்குமே, அதே மாதிரி ஸ்போர்ட்ஸ் முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி ஆயிரம் கோடி செலவு பண்ணி இருக்கலாமே என்று தெரிவித்தார்.

Categories

Tech |