அவசரகால கடனுதவி திட்டத்திற்காக மேலும் 50 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா காலத்தில் நலிவடைந்த துறைகளை மீட்க 4.5 லட்சம் கோடி அவசர கால கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது 5 லட்சம் கோடியாக அது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இதுவரை 3.67 லட்சம் கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories