உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜலாலாபாத் பகுதியில் வசித்து வரும் தினேஷ் (45),இவரின் தாய்க்கு நேற்று அதிகாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ்காக பலமுறை தொலைபேசி மூலமாக முயற்சித்துள்ளார். இருந்தாலும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை என்பதால் வீட்டில் இருந்த தள்ளு வண்டியில் தாயை அமர வைத்த மகன் அழைத்துச் சென்றார்.
நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு வண்டியிலேயே வைத்து அழைத்துச் சென்று ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் உத்திரபிரதேசத்தில் தொடர்கதையாக அரங்கேறி வரும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட மருத்துவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.