Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – நாளை மறுநாள் விசாரணை …!!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தாலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்று விட்டதால் இந்த வழக்கு மீண்டும் விசாரணை நடைபெறாமல் கிடப்பில் கிடந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை (4ஆம் தேதி ) நடைபெற்றது. இதில் சபாநாயகரின் செயலாளர் விளக்கம் தர உத்தரவிட்ட நீதிமன்றம் நாளை மறுநாள் ( 14ஆம் தேதி ) விசாரிக்கின்றது.

Categories

Tech |