Categories
சினிமா

“பால்கனியில் படுத்துக்கொண்டு வெலன்சியாவின் அழகை ரசிக்கும் நயன்”….. இணையத்தில் வீடியோ வைரல்…!!!!!

நயன்தாரா பால்கனியில் படுத்திருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் எடுக்கும் புகைப்படம், விடியோவை பகிர்ந்து வருகின்றார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் நயன்தாரா வெலன்சியா நகரில் இருக்கும் ஹோட்டல் ஒன்றின் பால்கனியில் படுத்துக்கொண்டு சீ வியூவை ரசிக்கும் காட்சியை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது லைக்குகளை குவித்து வருகின்றது.

https://www.instagram.com/reel/ChVJqjuMnkp/?utm_source=ig_embed&ig_rid=6f8e705d-2af3-48c7-86b0-ab2aa8c60c6b

Categories

Tech |