நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரயிலில் ஒன்று முதல் நான்கு வயது உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டண வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றமில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6 2020 தேதியிட்ட சுற்றறிக்கையில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தனி பெர்த் அல்லது இருக்கை வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது.