Categories
மாநில செய்திகள்

தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ்….. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ் வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்று அறிக்கையில், அரசின் இ சேவை மையங்கள் மூலமாக பள்ளிகளில் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழ் பெரும் சேவையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்தது.அதன்படி இ சேவை மையங்கள் மூலமாக இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலமாக சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பகிரப்படும். தகுதியானவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கலாம். ஒருவேளை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய காரணத்தை தலைமை ஆசிரியர்கள் கூற வேண்டும். தமிழக முழுவதும் பள்ளிகளில் தமிழ் வழி பயனதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

Categories

Tech |