Categories
அரசியல்

நேற்று நடந்த ட்விஸ்ட்…! முதல் ஆளாக “OPS” அணியில்….. செம ஷாக்கில் எடப்பாடி …!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். யாரெல்லாம் கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்களோ? அவர்கள் எல்லாம் மீண்டும் இணைப்போம் என்று கூறியிருந்தோம். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் கோட்பாடுகளுக்கு யாரெல்லாம் இசைந்து கொடுக்க விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் நீதிமன்ற உத்தரவை நாம் மதித்து நடப்போம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ்சுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வந்ததால் அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடருகின்றார். இதனால் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். அதிமுகவில் பொறுப்பு கிடைக்காமல், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் பலரும், ஓபிஎஸ் அணிக்கு தாவ இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், முதல் ஆளாக ஓபிஎஸ் அணிக்கு  முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாவுவார் என சொல்லப்படுகின்றது. அதிமுகவில் எடப்பாடி தலைமையில் அதிருப்தியில்  இருந்த அவர் சில நாட்களுக்கு முன்னாள் கூட பாஜகவில் இணைவார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

தற்போது அவர் ஓபிஎஸ் பக்கம் செல்வார் என்றும், அவரை தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இபிஎஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் அணி – இபிஎஸ் அணி இணையும் போது, மா.பாண்டியராஜன் ஓபிஎஸ் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |